Sports
ருத்துராஜ், சாம்சன், ரிங்கு சிங் அதிரடி.. அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி.. தொடரை வென்று அபாரம்!
இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது. ஆனால் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
அதனைத் தொடர்ந்து பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணியோடு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால்(18) , திலக் வர்மா(1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். '
ஆனால், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ருத்துராஜ், சாம்சன் அயர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். சிறப்பாக ஆடிய சாம்சன் (40) ரன்களுக்கும்,. அரைசதம் அடித்த ருத்துராஜ் (58) ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், இறுதியில் அறிமுக வீரர் ரிங்கு சிங்(38) மற்றும் சிவம் துபேவின் (22) அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், கேப்டன் பால்பர்னி (72) பின்வரிசை வீரர்களுடன் இணைந்து அணி கௌரவமான இலக்கை எட்ட உதவினார். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!