Sports
"காலம் காலமாக இருந்த இந்த திறமை இந்திய அணியில் காணாமல் போய்விட்டது" -பாக். முன்னாள் வீரர் வருத்தம் !
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், பல்வேறு முன்னணி வீரர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காலம் காலமாக தரமான சுழல் பந்து வீச்சை அபாரமாக எதிர்கொள்ளும் இந்திய பேட்ஸ்மேன்களின் திறமை தற்போது காணாமல் போய்விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், " இந்திய அணி ஒவ்வொரு தொடரிலும் நிறைய மாற்றங்களை செய்கிறார்கள். வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால் சுழற்சி முறையில் கொடுக்கலாம். ஆனால், விளையாடும் 11 பேர் அணியில் பாதி பேருக்கு ஓய்வு கொடுத்து பாதி பேரை விளையாட வைப்பது சரியான முறை அல்ல. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் பிரச்சனை நிலவுகிறது.
இதனால் மூத்த வீரர் தவானை அணியில் சேர்க்கலாம். பொதுவாகவே இந்திய வீரர்கள் காலம் காலமாக ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொள்வார்கள். . ஆனால், சமீப காலமாக இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளவில்லை. இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!