Sports
கிடைத்த புள்ளிகளில் பாதிக்கு மேல் இழந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா.. ஒரே தொடரில் சரிந்த இரு அணிகளில் கனவு !
டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. . இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அந்த தொடரில் கம்பேக் செய்த இங்கிலாந்து அணி, 3-வது டெஸ்ட் மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-2 என்று சமன் செய்தது. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்த தொடரை இங்கிலாந்து அணி போராடி சமன் செய்தாலும் அந்த அணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடரில் மட்டும் ஐசிசி-யின் புதிய விதிமுறை காரணமாக ஓவர்களை குறித்த நேரத்திற்குள் வீசாததால் இங்கிலாந்து 19 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளை இழந்துள்ளது. இங்கிலாந்து 2 வெற்றிகள் மற்றும் ஒரு ட்ராவுடன் மொத்தம் 28 புள்ளிகள் பெற்ற நிலையில், 19 புள்ளிகளை அந்த அணி இழந்துள்ளது.
அதே போல இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியும் 2 வெற்றிகள் மற்றும் ஒரு ட்ராவுடன் 28 புள்ளிகள் பெற்ற நிலையில் அந்த அணி 10 புள்ளிகளை இழந்து இந்தியா தொடரில் மொத்தம் 18 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூலை 13ம் தேதி தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டி ஸ்லோ ஓவர் ரேட்டுக்கான புதிய அபராத விதிகள் வகுக்கப்பட்டன. அதோடு இதில், அணிகள் தங்கள் ஊதியத்திலிருந்து 5% தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!