Sports
உலக அளவில் கொல்கத்தா அணிக்கு நேரும் சோகம்.. திரும்பும் இடமெல்லாம் ஷாருக்கானுக்கு விழும் அடி !
இந்தியாவில் நாடாகும் ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20" என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) என பெயர் வைத்துள்ளது.இது தவிர மும்பை அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும்,கொல்கத்தா அணி நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கி உள்ளது.
இந்த தொடரின் லீக் போட்டிகள் எ தற்போது முடிவுக்கு வந்த நிலையில், இதில் சியாட்டில் , டெக்சாஸ், நியூயார்க் , வாஷிங்டன் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால். இதில் கொல்கத்தா அணி நிர்வாகம் வாங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா அணி நிர்வாகம் வாங்கியுள்ள அணிகள், ஐபிஎல், கரிபியன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய லீக் போட்டிகளில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில் தற்போது அமெரிக்காவிலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளதை பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். கொல்கத்தா அணி நிர்வாகத்துகு நடிகர் ஷாருகானும் உரிமையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!