Sports
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க கால்பந்து அணிக்கு அனுமதி மறுப்பு- ஒன்றிய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே கோலோச்சி வந்த நிலையில், சமீப ஆண்டுகளில் பிற விளையாட்டுகளுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அதோடு ஐபிஎல் பாணியில், கால்பந்து, கபடி, வாலிபால், இறகுப்பந்து ஆகிய போட்டிகளுக்கும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில் தடகளம், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளிலும் இந்திய வீரர்கள் முக்கிய தொடர்களில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், கால்பந்துக்காக தொடங்கப்பட்ட ஐ.எஸ்.எல் தொடர் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.
அதோடு, இந்தியாவில் கால்பந்துக்கும் தற்போது ஆதரவு பெருகி வருகிறது. கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்திரி இந்தியாவில் பிரபலமான வீரராக மாறியுள்ளார். அவர் தலைமையில் சமீபத்தில் இந்திய கால்பந்து அணி, இன்டர்கான்டினென்டல் கோப்பை மற்றும் தெற்காசிய கோப்பையை வென்று அசத்தியது.மேலும், உலக தரவரிசையில் 100-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கால்பந்து அணி பங்கேற்க இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், குழு போட்டிகளை பொறுத்தவரை ஆசிய தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகள் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ஆசிய தரவரிசையில் இந்திய அணி, 18 வது இடத்தில் உள்ள நிலையில், அரசின் அறிவிப்பு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்திய கால்பந்து அணி தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!