Sports
BCCI-யால் ராயுடுவுக்கு நேர்ந்த சோகம்.. CSK அணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20" என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக CSK அணியின் முன்னாள் வீரர் டுபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், CSK அணியின் வீரர்களான டெவான் கான்வே, மிட்சல் சாண்ட்னர் மற்றும் CSK அணியில் பயிற்சியாளராக இருக்கும் பிராவோ வீரராக அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியில் சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற CSK அணி அம்பத்தி ராயுடு இடம்பெற்ற நிலையில், தற்போது தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியுள்ளதாக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், பிசிசிஐ-யின் புதிய முடிவு காரணமாகவே அவர் அந்த அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமிபத்தில் கூடிய பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டத்தில், இந்திய வீரர்கள் திடீர் ஓய்வை அறிவித்து வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதை தடுக்கும் வகையில் கூலிங் ஆஃப் பீரியட் என்ற முறை அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. இதன் மூலம், ஓய்வு பெறும் வீரர்கள் வெளிநாட்டு லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவதற்கு முன் கூலிங் ஆஃப் பீரியட் காலத்தில் இருக்க வேண்டும். அதன்பின்னரே அந்த வீரர்கள் வெளிநாட்டு லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே ராயுடுவால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடமுடியவில்லை என்றும், அதனால் தான் அவர் அந்த தொடரில் இருந்து விலகினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!