Sports
ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் அணி பங்கேற்கும்.. BCCI உறுதி.. களமிறங்கும் இரண்டாம் கட்ட அணி !
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது இதில் ஒரு சிக்கலும் எழுந்துள்ளது.
ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.
இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ஆடவர் அணியின் பங்கேற்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகளிர் தரப்பில் ஹர்மன்ப்ரீட் கவுர் தலைமையிலான மெயின் அணி அனுப்பப்படும் என்றும், ஆடவர் தரப்பில் இரண்டாம் தரப்பு அணி அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.
அந்த அணியின் கேப்டனாக ஷிகர் தவான் இருப்பார் என்றும், இதில் ரின்கு சிங், ஜிதேஷ் ஷர்மா மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதிக்குள் பங்கேற்கும் அணி வீரர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், அடுத்த சில நாள்களில் அணி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!