Sports
ஒரு ஆண்டுக்கு பின் மீண்டும் களமிறங்கும் பும்ரா.. NCA-வில் தொடர்ந்து ஓவர்களை வீசி அசத்தல் !
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா, தற்போது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியைத் தழுவ அவரின் காயமும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ரா களமிறங்கப்படுவார் என தகவல்கள் கசிந்த நிலையில், முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் பும்ரா இனி நேரடியாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தான் களமிறங்குவார் என தகவல் வெளியான நிலையில் ரசிகர்கர் அவர் ஐபிஎல் தொடர் என்றால்தான் ஆடுவாரா என விமர்சிக்கத்தொடங்கினர். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் பும்ரா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இவர் இல்லாமல் இந்திய அணி ஆடியஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் பும்ரா எப்போது மீண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதோடு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலககோப்பையிலாவது பும்ரா ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பும்ரா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு அவர் தொடர்ச்சியாக 7 ஓவர்களை வீசி பயிற்சி மேற்கொண்டதாகவும், இதனால் டி20 தொடரில் அவர் இடம்பெறலாம் என்றும் தகவல் வெளியானது. அதே நேரம் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் பும்ராவை விளையாடவைத்து அவரை மீண்டும் காயமடைய வைக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!