Sports

அவரிடம் பயிற்சி எடுத்தும் இன்னும் நீங்கள் திருந்தவில்லையா ? -இளம்வீரரை விமர்சித்த வீரேந்திர சேவாக் !

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீரர் உம்ரான் மாலிக் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிவேக பந்துவீச்சு மூலம் கவனம் ஈர்த்தார். அதில் தொடர்ந்து தனது சிறப்பான அதிவேகப்பந்துவீச்சின் மூலம் இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டது. இந்திய அணியிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அதில் சிறப்பாக செயல்பட்டார்.

அதிலும் த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் களமிறங்கி அதில் தன்னுடைய அதிவேகமான பந்துவீச்சையும் இந்தத் தொடரில் பதிவுசெய்தார். அதிலும் இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் வீசிய ஒரு பந்தை மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசியிருந்தார் அவர். இதுநாள் வரை ஒரு இந்திய பௌலர் வீசிய அதிவேகமான பந்து அதுதான்.

இதன் காரணமாக உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அவர் இந்தியாவுக்கு கிடைத்த சொத்து என சர்வதேச வீரர்களும் உம்ரான் மாலிக்கை கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வந்தார். மேலும், விக்கெட் எடுக்கவும் தொடர்ந்து தவறி வந்தார். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அவரை சில போட்டிகளுக்கு வெளியே அமரவைத்தது. அதன்பின்னர் இறுதிக்கட்டத்தில் அணியில் இடம்பெற்றாலும் அதிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்த நிலையில், டேல் ஸ்டைன் போன்ற மகத்தானவரிடம் நீண்ட காலம் பயிற்சிகளை எடுத்தும் உம்ரான் மாலிக் கடந்த வருடம் செய்த அதே தவறை மீண்டும் இம்முறை செய்துள்ளார் என இந்திய அணி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உம்ரான் மாலிக்கிடம் இருக்கும் பிரச்சனை என்னவெனில் அவர் தொடர்ந்து தன்னுடைய லென்த்தை மாற்றி வருகிறார். அவர் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. டேல் ஸ்டைன் போன்ற மகத்தானவரிடம் நீண்ட காலம் பயிற்சிகளை எடுத்தும் எந்த லென்த்தில் வீச வேண்டுமென்ற ஐடியா இன்னும் அவருக்கு வரவில்லை. கடந்த வருடம் செய்த அதே தவறை மீண்டும் இம்முறை செய்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.

Also Read: "அவர் என் கைகளில் இருக்கிறார்.. அதனால் கவலை வேண்டாம்" - பதிரனா குறித்து தோனி கூறியது என்ன ?