Sports
அவரிடமிருந்து கற்றுக்கொண்டது என்ன ? - தோனியின் கேப்டன்ஷிப் குறித்து KL ராகுல் கூறியது என்ன ?
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராகத் திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கே.எல்.ராகுல் சொதப்பிய நிலையில், அணியில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கேப்டன் பதவி திரும்பபெறப்பட்டது. இந்தியா நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக அந்த அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தினார்.
ஐபிஎல் தொடரின் போது பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்தார். உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேறிய போதிலும் அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி கூறியது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கே.எல்.ராகுல் ரோகித் சர்மா, கோலி, தோனியின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார். ரோஹித் குறித்து பேசிய அவர்"ஒவ்வொரு வீரரின் பலம் என்ன என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும். தன் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் ஆட்ட நுணுக்கத்தையும் ரோகித் சர்மா அறிந்து கொள்வார்" என்று கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி குறித்து "கிரிக்கெட் மீதான பற்று, வெறி அணியை முன்னின்று வழி நடத்துவது, எப்படி சாதிப்பது என்பதெல்லாம் எனக்கு கோலியிடம் மிகவும் பிடித்த விஷயமாகும். விராட் கோலியை பொறுத்தவரை ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தரத்தை அதிகப்படுத்தி விட்டு சென்று விட்டார்" என்று கூறியுள்ளார்.
மேலும் தோனி குறித்து கூறியுள்ள அவர், தோனி தான் என்னுடைய முதல் கேப்டன். நான் கிரிக்கெட் குறித்து பல விஷயங்களை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களுடனும் தோனி நல்ல உறவை வைத்துக் கொள்வார். இதன் மூலம் தோனிக்காக மற்ற வீரர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள்" என்று கூறியுள்ளார். .
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!