Sports
சென்னை அணியில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்.. பிளே ஆஃப் சுற்றில் இடம்பெறமாட்டார் என அதிர்ச்சி தகவல் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.
அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், ஐபிஎல் மினி ஈழத்தில் சென்னை அணி பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால் சென்னை அணிக்காக பென் ஸ்டோக்ஸ் முதல் இரு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார். அதன்பின் நடந்த நான்கு ஆட்டங்களை காயம் காரணமாக அவர் தவறவிட்டார். இந்த நிலையில் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இங்கிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு விரைவில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜூன் 16ஆம் தேதி ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளதால், நிச்சயம் அவர் இங்கிலாந்து திரும்புவார் என்று கூறப்படுகிறது
Also Read
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
-
விளம்பர வெறியால் கருகும் சம்பா பயிர்கள்.. விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய்.. - உதயநிதி விளாசல்!