Sports
"நான் பேட்டிங் செய்யும்போது ரசிகர்கள் ஏமாற்றமடைகிறார்கள்" -ஜடேஜாவின் இந்த கருத்துக்கு காரணம் என்ன ?
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
அதிலும் தோனியின் பேட்டிங்கை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் அவருக்கு முன்னர் களமிறங்கும் வீரர்கள் ஆட்டமிழக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தோனிக்கு முன் களமிறங்கும் ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் போட்டியின்போது கூச்சலிடுவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள ஜடேஜா "நான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்குகிறேன். நான் பேட்டிங் செய்யும்போதெல்லாம் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள். காரணம் அவர்கள் தோனியை விரைவில் பார்க்க வேண்டும் என்பதற்காக தோனி தோனி என்று கத்துகிறார்கள்.நான் ஆட்டமிழந்து போகும் போது தோனி வருகிறார் என்பதற்காக மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள்.கொஞ்சம் யோசிச்சு பாருங்கள் இதுவே நான் பேட்டிங் வரிசையில் கொஞ்சம் முன்பு களமிறங்கி இருந்தால், அப்போதும் எங்கள் ரசிகர்கள் நான் விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்டம்... கருத்தரங்கம் தொடக்கம் - விவரம்!
-
47 ஆண்டுகளுக்கு பிறகு... “யாரு ஹீரோ...?” - சரியாக 12.07-க்கு வெளியானது KH x RK Glimpse வீடியோ!