Sports
"நான் வீரர்களிடம் எரிச்சல் அடைய காரணம் இதுதான்" - வர்ணனையாளர் கேள்விக்கு தோனியின் பதில் என்ன தெரியுமா?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.
அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இங்கு ஐபிஎல் தொடரில் பரமவைரிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. போட்டிக்கு முன்னதாக டாஸ் போடும்போது சென்னை அணி கேப்டன் தோனியிடம் வர்ணனையாளர் இந்த தொடரில் அவரின் கோபம் குறித்து கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தோனி, ரசிகர்கள் கூட்டத்தால் மைதானங்கள் நிரம்பி வழியும்போது, வீரர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அது சற்றே எரிச்சலடைய செய்கிறது. எங்கள் வீரர்கள் களத்தில் இன்னும் முழு கவனத்துடன் இருக்கவேண்டும்" என்று கூறினார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!