Sports
காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் IPL-ல் இருந்து விலகல்.. ரசிகர்கள் சோகம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராகத் திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கே.எல்.ராகுல் சொதப்பிய நிலையில், அணியில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கேப்டன் பதவி திரும்பபெறப்பட்டது. இந்தியா நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக அந்த அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தி வருகிறார்.
அவர் மெதுவாக ஆடுகிறார் என ஐபிஎல் தொடரிலும் விமர்சனம் எழுந்த நிலையில், அணியின் பல்வேறு தோல்விகளுக்கு அவரே காரணம் என முத்திரை குத்தப்பட்டது. பல முன்னணி வீரர்கள் கே.எல்.ராகுல் மெதுவாக ஆடுகிறார் என விமர்சித்து தள்ளியிருந்தனர்,
இதனிடையே நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்தார். உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேறிய போதிலும் அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி கூறியுள்ளது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!