Sports
பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்கிறதா ஆசியக்கோப்பை - ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவின் பின்னணி என்ன?
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.
இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.
அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டி இது தொடர்பான அறிக்கையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது .
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த முடிவுக்கு இதுவரை ஜெய் ஷா தலைமை வகிக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பதிலளிக்கவில்லை என்றும், இந்த முறை ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் அல்லாது பொதுவான இடத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் செலவுகளை குறைப்பதற்காக இலங்கை அல்லது ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் இருந்து இடம் மாறினால் ஆசிய கோப்பை தொடரை புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.
Also Read
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!