Sports
" விராட் கோலிக்கு இணையாக இப்போதுகூட தோனியால் அதை செய்யமுடியும்" -ஸ்ரீகாந்த் கூறியது என்ன ?
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தோனியால் இப்போதுகூட விராட் கோலிக்கு இணையாக விக்கெட்டுகளில் ஓட முடியும் என கூறியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து பேசிய அவர், "சென்னை அணியை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் முக்கியமான வீரர்களாக இருப்பார்கள்.
ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து மீண்டு தற்போது அபாரமாக ஆடிவருகிறார். ஐபிஎல் தொடரின் சிறந்த பினிஷர் ஜடேஜாதான்.மேலும், தோனி குறித்து பேசிய அவர், "தோனி, கபில்தேவ் போன்ற வீரர்கள் இயற்கையான அத்லெட்டிக் வீரர்கள், அவர்கள் எப்போதும் சிறப்பாக ஆடுவார்கள். அதிலும் தோனியால் இப்போதுகூட விராட் கோலிக்கு இணையாக விக்கெட்டுகளில் ஓட முடியும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ரோஜா!