Sports
முடிவுக்கு வந்த மகளிர் IPL தொடரின் லீக் சுற்று: தொடரிலிருந்து வெளியேறிய நட்சத்திர அணி - முழு விவரம் என்ன?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு இந்தாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கி விளையாடி வருகின்றன.
இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதன் அடிப்படையில், புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த டெல்லி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும், மும்பை அணி இரண்டாம் இடம் பிடித்த நிலையில், அந்த அணியும் மூன்றாம் இடம் பிடித்த உ.பி அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
அதே நேரம் பட்டியலில் 4ம் இடம் பிடித்த பெங்களூரு அணியும், கடைசி இடம் பிடித்த குஜராத் அணியும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள மும்பை மற்றும் உ.பி அணிகள் மோதும் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்ம் அதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி வரும் 26-ம் தேதி நடக்கவுள்ளது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!