Sports

ஆண்கள் IPL-ஐ மிஞ்சிய மகளிர் IPL.. இறுதி 3 ஓவர்களில் 52 ரன்களை விரட்டி உ.பி வாரியர்ஸ் அபார வெற்றி !

ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு இந்தாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்குகின்றன.

இதன் முதல் போட்டியில் மும்பை அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற நிலையில், நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான மெக் லேனிங் 72 ரன்களும், ஷபாலி வெர்மா 84 ரன்களும் குவித்து அசத்தினர்.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய உ.பி அணி முதலில் கடுமையாக தடுமாறியது. பின்னர் இறுதிக்கட்டத்தில் 3 ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது.

இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது ஜோடி சேர்ந்த எஸ்லிஸ்ஸ்டோன் கிரேஸ் ஹாரிஸ் ஜோடி குஜராத் அணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து. இறுதிஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிரேஸ் ஹாரிஸ் 6,2,4,4,6 என அதிரடியாக ரன்குவித்து ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் அணியை வெற்றி பெறவைத்தார். இந்த திரில் போட்டி மகளில் ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Also Read: 1967 மார்ச் 6 - தி.மு.க முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, பேரறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்ற நாள் !