Sports
"உங்களைவிட மெஸ்ஸிதான் சிறந்த வீரர்" - கூச்சலிட்ட ரசிகரை திட்டிய ரொனால்டோ.. வைரலாகும் வீடியோ !
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்தின் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ரொனால்டோவும் மெஸ்ஸியும் சிறந்த வீரர்களாக கொண்டாடப்படுகின்றனர். மேலும், இந்த இரு வீரர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இருவர் மோதும் போட்டியில் இந்த இரு அணி ரசிகர்களும் அடித்துக்கொள்ளாத குறையாக வார்த்தை போரில் ஈடுபடுவர்.
இருவருக்கும் இடையில் யார் சிறந்தவர் என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதும் இந்த மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. ரொனால்டோவை விட அதிக பிபா விருதுகள், 'பாலன் டி ஓர்' விருதுகளை வாங்கியுள்ள மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ரொனால்டோவை விட சிறந்த வீரர் என்பதை நிரூபித்து விட்டார் என கூறப்பட்டது.
தற்போது ரொனால்டோ சவூதி அரேபியாவின் லீக் போட்டிகளில் விளையாடிவரும் நிலையில், அங்கு தொடர்ந்து அல்-நாசர் அணிக்காக கோல் அடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் போட்டி முடிந்து ஓய்வறைக்கு ரொனால்டோ சென்றுகொண்டிருந்த நிலையில், அங்கிருந்த ரசிகர் ஒருவர் ரொனால்டோவைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் எனக் கூறினார்.
இதனால் கோபம் அடைந்த ரொனால்டோ, அந்த ரசிகரைக் கடிந்துகொண்டு வேகமாக வெளியேறினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமீபத்தில் கூட பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்ஸி வென்ற நிலையில், தற்போது ரசிகர்கள் ரொனால்டோவை கிண்டல் செய்து வருகின்றனர். அதே நேரம் ரொனால்டோ ரசிகர்களும் அவரின் சாதனைகளை புகழ்ந்து வருகின்றனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!