Sports
"ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுங்கள்".. விராட் கோலியின் ட்விட்டர் பதிவுக்கு Zomato நிறுவனத்தின் கிண்டல் பதில்!
பிப்ரவரி 9ம் தேதி தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி மும்மரமாக தயாராகி வருகிறது. நீண்ட ஓய்வுக்குப் பிறகு இந்த தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார். அதேபோல் ரோஹித் ஷர்மா, புஜாரா போன்ற வீரர்களும் களத்தில் உள்ளனர்.
அதேபோன்று பார்டர் கவாஸ்கர் தொடர் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் போன்றே பத்து வீசும் நபரை வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த தொடர் அனைவர் மத்தியிலும் உற்சாக வேகத்தை எடுத்துள்ளது.
இந்நிலையில், "சமீபத்தில் நான் புதிதாக வாங்கிய செல்போன் பாக்ஸை கூட திறந்து பார்க்காத நிலையில் அந்த செல்போன் தொலைந்து போய்விட்டது" என்று வீராட் கோலி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் பல விதமாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சொமேட்டோ நிறுவனம் விராட் கோலி ட்விட்டருக்கு கிண்டலாக பதில் அளித்துள்ளது. சொமேட்டோ நிறுவனத்தின் ட்விட்டர் பதிவில், உங்களது புதிய தொலைப்பேசி காணாமல் போன சோகம் மறக்க அண்ணியின் செல்போனில் இருந்து ஜஸ்கிரீம் ஆர்டர் செய்து பாருங்கள் சற்று உங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவைப் பார்த்த விராட் கோலி ரசிகர்கள் பலரும் சொமேட்டோ நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது ஒரு விளம்பரத்திற்கான யுக்தியாகக் கூட இருக்கும் எனவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை விராட் கோலியின் செல்போன் எங்கே தொலைந்து விட்டது என்ற விவரம் தெரியவில்லை.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!