Sports

ஹர்திக் பாண்டியா சுயநலக்காரர்.. அதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணம்.. ரசிகர்கள் தாக்கு !

நேற்று முன்தினம் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் சூரியகுமார் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இறுதிவரை போராடி அரைசதம் அடித்து கடைசி ஒவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குடித்து தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் இறுதிஓவரில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் 27 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலறும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சுயநலமே அணியின் தோல்விக்கு காரணம் என கூறிவருகின்றனர்.

இந்த போட்டியில் இந்தியா உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், சிவம் மாவி என மூன்று முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்கிய நிலையில், ஆல் ரவுண்டரான கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் ஓவரை வீசினார். அதில் 12 விளாசப்பட்ட நிலையிலும் தொடர்ந்து 3-வது ஓவரையும் அவரே வீசினார். அதேநேரம் உம்ரான் மாலிக் தனது முதல் ஒவரில் 16 ரன்கள் கொடுத்த காரணத்தால் அடுத்து அவருக்கு ஓவரே கொடுக்கவில்லை.

அதேபோல அணியின் இடம்பெற்றுள்ள தீபக் ஹூடா தொடக்க அல்லது 3,4-வது வீரராக களமிறங்கியபோது அணிக்காக சிறப்பாக ஆடினார். அதேநேரம் பின்களத்தில் இறங்கியபோது தடுமாறியே வந்துள்ளார். அப்படி பட்ட வீரரை அணி அணி 15-3 என்று தத்தளித்த போது இறக்காமல் வழக்கமாக பின்களத்தில் இறங்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். இதன் மூலம் தீபக் ஹூடாவின் திறன் வீணடிக்கப்பட்டது. இப்படி அவர் சுயநலமாக முடிவெடுப்பதே அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!