தமிழ்நாடு

“என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ், தன்னிடம் சிறையில் இருந்தபோதே முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்ததால் நடிகை சாகத் கன்னா பேட்டியளித்துள்ளார்.

“என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடந்த அ.தி.மு.க அரசியல் மோதலில் இரட்டை இல்லை சின்னத்தை யார் பெறுவது என்று கடும் போட்டி நிலவியது. இதில் பழனிசாமி ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தினகரன் இருக்க, இருவருக்குமிடையே நேரடி மோதல் நடைபெற்றது.

அப்போது இரட்டை இல்லை சின்னத்தை பெற்று தருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு இலஞ்சம் தர முற்பட்டதாக தினகரனும் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தினகரனுக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது.

“என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷிற்கு, பாலிவுட் நடிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரையும் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் மோசடி, பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி, திஹார் சிறைக்கு சென்ற சுகேஷ், பின்னர் டெல்லி ரோகினி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்தபடியே தனது மோசடி தொழிலை தொடர்ந்தார். அதன்படி சுகேஷ் இருந்த அதே சிறையில், மோசடி வழக்கில் கைதான 'போர்டிஸ்' மற்றும் 'ரான்பாக்சி' நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்கள் ஷில்விந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோரை விடுவிக்க உதவுவதாக கூறி ரூ.200 கோடி வரை பணம் பறித்துள்ளார் சுகேஷ்.

“என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

அதுமட்டுமின்றி, மேலும் பல்வேறு மோசடி வழக்குகளும் இவர் மீது பாய்ந்த நிலையில், ஜாமீன் கிடைக்காமல் தற்போது வரை சிறையிலேயே உள்ளார். இதனிடையே, இவரது மனைவியும், நடிகையுமான லீனா மரிய பால் என்பவரும் இவரது மோசடிக்கு துணை போனதாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி உள்ளிட்ட பல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுகேஷ், சிறையில் இருந்துகொண்டே மாடல் அழகிகள், இளம் நடிகைகளை வரவழைத்து அவர்களுக்கு பரிசுப்பொருள்களையும், பணத்தையும் வழங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

“என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இதில் நடிகை சாகத் கன்னா என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது. தற்போது சாகத் இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் தந்துள்ளார். இதையடுத்து இது குறித்து நடிகை சாகத் கன்னா ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தனக்கும் சுகேஷிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் தன்னிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இது குறித்து பேசிய அவர், "கடந்த 2018-ம் ஆண்டு நான் பள்ளி விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து டெல்லி சென்றேன். அப்போது விமான நிலையம் சென்றபோது அங்கு ஏஞ்சல் என்ற பெண் எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் பிங்கி இராணி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பின்னரே பிங்கி இராணி தான் சுகேஷின் உதவியாளர் என்பது எனக்கு தெரியவந்தது.

பின்னர் நான் ஏஞ்சல் காரில் சென்றேன். அவர் என்னை திகார் சிறைக்கு கூட்டி சென்றார். அங்கே சுகேஷ் இருந்த அறைக்கு சென்றோம். சுகேஷின் அறையில் விலையுர்ந்த வாட்ச், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. தொடர்ந்து சுகேஷ் வந்து தன்னை சேகர் ரெட்டி என்று போலியாக பெயரை மாற்றி அறிமுகம் செய்து கொண்டார்.

“என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

தொடர்ந்து என்னிடம் பேசிய அவர், தான் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும், அங்கே சொந்தமாக ஒரு டி.வி. சேனல் நடத்தி வருவதாகவும் கூறினார். தற்போது ஒரு சிறிய கேசில் சிறையில் இருப்பதாகவும், பெரிய புள்ளி என்பதால் தனக்கு ராஜ மரியாதை கிடைப்பதாகவும் கூறினார். மேலும் தான் அதிகமாக டிவி சீரியல்களை விரும்பிப் பார்ப்பதாகவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி, மண்டியிட்டு ப்ரோபோஸ் செய்தார். நானோ எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தேன். அதற்கு அவரோ, எனது கணவன் சரியானவர் இல்லை என்றும் எனது குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இருப்பதாகவும் என்றும் கட்டாயப்படுத்தினார்.

இதனால் ஆத்திரப்பட்டு நான் கத்த தொடங்கினேன். ஆனால் சிறை என்பதால் எனக்கு அதிகமான பயமிருந்தது. உடனே ஏஞ்சல் என்னை வெளியே இழுத்து சென்றார். பின்னர் எனது கையில் ஏஞ்சல் ரூ. 2 லட்ச ரூபாய், விலை உயர்ந்த வாட்ச் ஆகியவற்றை பரிசாக தந்தார். நான் மும்பைக்கு சென்றதும் சுகேஷ் தரப்பிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்தன. அவர்கள் திகார் சிறைக் காட்சிகள் தங்களிடம் வீடியோவாக இருப்பதாகவும், அதை வெளியிட்டு விடுவதாகவும் கூறி ரூ.10 லட்சம் பணத்தை தர வேண்டும் என்று மிரட்டி என்னிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை பறித்து விட்டனர்.

“என்கிட்ட முட்டிபோட்டு ப்ரொபோஸ் செய்தார்..”- சிறையில் இருக்கும் சுகேஷ் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

சிறிது நாட்கள் கழித்து சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் என்னிடம் தொலைபேசி மூலம் பேசினார். மூன்று முறை பேசிய அவர், என் குழந்தைகளை அக்கறையாக விசாரித்து, எனக்கு ஏதாவது தேவையா? என்றும் கேட்டார். இந்த பிரச்னையால் எனது திருமண வாழ்க்கை பாதிப்பு கண்டது. நானும் எனது கணவரும் தற்போது பிரிந்து வாழ்கிறோம். நான் ஆரம்பத்திலேயே போலிஸிடம் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், அடுத்தடுத்து பிரச்னைகள் வந்ததால் அதில் இருந்து தப்பினால் போதும் என்பது மட்டுமே எனது கவனத்தில் இருந்தது.

இந்த சம்பவங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் ரூ.200 கோடி மோசடி பற்றிய செய்திகள் வந்தன. அதன் பிறகே சுகேஷ் யார்? ஏஞ்சல் யார்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன். நான் சந்தித்த பாதிப்புகளை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற இதை தற்போது வெளியே கூறுகிறேன்" என்று சாகத் கன்னா கூறியுள்ளார்.

Related Stories

Related Stories