Sports
சாதனை மேல் சாதனை படைக்கும் இளம் வீராங்கனை ஷஃபாலி.. ஷார்ட் பந்துகளை எதிர்கொண்டது குறித்து விளக்கம் !
கடந்த 2018ம் ஆண்டு 16 வயது இளம் வீராங்கனையாக ஷஃபாலி வெர்மா இந்திய அணியில் இடம்பிடித்தார். தொடர்ந்து அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அதிரடி ஆட்டம் ஆடிய ஷஃபாலி உலக கிரிக்கெட்டையே திரும்பிப்பார்க்க வைத்தார்.
அதோடு அதே ஆண்டில் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் சுஸி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி 19 இடங்களில் முன்னேறி 761 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இளம் வயதில் முதலிடம் பிடித்த வீராங்கனை என்ற உலகசாதனையை படைத்தார்.
மேலும், 16வது வயதில் இரண்டு அரைசதங்கள் அடித்து 30 ஆண்டுகளாக இருந்துவந்த சச்சினின் சாதனையையும் முறியடித்தார். அவர் தற்போது மற்றொரு சாதனையையும் பெற்று அசத்தியுள்ளார். தற்போது நடந்துவரும் ஐசிசியின் யு-19 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் ஷஃபாலி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பவர்பிளேவின் 6ஆவது ஓவரை எதிர்கொண்ட அவர், அதில் முதல் 5 பந்துகளையும் பவுண்டரியாக விளாசி, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஒரே ஓவரில் 26 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் யு-19 டி20 உலகக்கோப்பையில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து பேசிய அவர், ஆஸ்திரேலிய, இங்கிலாந்து சுற்றுப்பயணங்கலில் ஷார்ட் பந்துகளில் திணறியதால் அதில் சிறப்பாக விளையாட முடிவெடுத்துள்ளார். இதற்காக 25 வயதுடைய ஆண் பவுலர்களை மணிக்கு 125-130 கிமீ வேகத்தில் வீசச்சொல்லி அதன்மூலம் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள பயிற்சி எடுத்துள்ளார். மேலும், ஒரு நாளைக்கு சுமார் 200-250 ஷார்ட் பந்துகளை எதிர்கொண்டதாகவும், இதுவே தற்போது ஷார்ட் பந்துகளில் சிறப்பாக ஆடக்காரணம் என்றும் கூறியுள்ளார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!