Sports
வீடு- BMW கார்- Kawasaki பைக்: KL ராகுல் திருமணத்தில் பிரபலங்களின் வாய் பிளக்க வைக்கும் பரிசுகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து 2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்தினார்.
சில நாட்களுக்கு முன்பு கே.எல்.ராகுல் தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தம்பதிக்குக் கோடிக்கணக்கான மதிப்புடைய திருமண பரிசுகள் குவிந்து வருகிறது.
கே.எல்.ராகுலின் மாமனாரும் நடிகருமான சுனில் ஷெட்டி திருமண பரிசாக இவர்களுக்கு மும்பையில் ரூ.50 கோடி மதிப்பில் புதிய வீட்டை கொடுத்துள்ளதாகவும், அதேபோல் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள Chopard வாட்சையும், நடிகர் அர்ஜூன் கபூர் ரூ.1.5 கோடியில் வைர பிரேஸ்லெட்டையும், நடிகர் சல்மான் கான் ரூ.1.64 கோடியில் உள்ள ஆடி காரையும் பரிசாகக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோன்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.2.17 கோடியில் BMW காரையும், முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ரூ.80 லட்சம் மதிப்பிலான Kawaski Ninia பைக்கையும் பரிசாகக் கொடுத்துள்ளதாகச் செய்திகள் வெளி வருகின்றன. ஆனால் இது உண்மைதானா என்பது உறுதியாகவில்லை. இந்த பரிசுகள் குறித்து கே.எல். ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தம்பதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!
-
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!
-
“பதவியைக் காக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறியவர்தான் பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!