Sports
"நான் பேட்டிங் செய்வதைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்" -சூர்யகுமாரை கிண்டல் செய்த ராகுல் டிராவிட் !
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார். மேலும், இந்தியாவில் தனது முதல் சதத்தையும் சூரியகுமார் யாதவ் விளாசியுள்ளார். ரோஹித் சர்மா மொத்தம் 4 சதங்களோடு முதல் இடத்தில இருக்கும் நிலையில் சூரியகுமார் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த போட்டி முடிந்த பின்னர் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூரியகுமாருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிராவிட் "சிறு வயதாக இருந்தபோது, நான் பேட்டிங் செய்வதைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்" என்று அவரை கேலி செய்துள்ளார். தற்போது சூரியகுமார் அதிரடிக்காக புகழ் பெற்றார் என்றால் அப்போது டிராவிட் தடுப்பாட்டத்துக்காக புகழ் பெற்று இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்பட்டார்.
இதனைக் குறிப்பிட்டே நீங்கள் என் ஆட்டத்தை பார்த்து இருந்தால் இப்படி அதிரடியாக ஆடி இருக்க மாட்டீர்கள் என டிராவிட் கூறியுள்ளார். இந்த நிகழ்வை இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!