Sports

ஒரே கேட்ச்சில் வங்கதேசத்தை கதறவிட்ட ரிஷப் பண்ட்.. பெரும் பழியில் இருந்து தப்பித்த கோலி ! Video வைரல்!

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த நிலையில் இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் ஆகியோர் அரைசதமடித்த நிலையில், முதல் இன்னிங்ஸ்சில் 404 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

பின்னர் 513 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி ஆடிய வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் சாண்டோ மற்றும் சாகிர் ஹசன் சிறப்பாக விளையாடி இந்திய பவுலர்களை சோதித்தனர். முதல் விக்கெட்டிற்கு 124 ரன்கள் குவித்த இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார்.

உமேஷ் யாதவ் வீசிய பந்து சாண்டோ பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்று இருந்த விராட்கோலியை நோக்கி வர அவர் அதனை பிடிக்க தவறிய நிலையில், அவரின் கையில் பட்டு பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்க்கு செல்ல அவர் டைவ் அடித்து அபாரமாக சாண்டோவை ஆட்டமிழக்க செய்தார். அதன்பின்னரே இந்திய அணி நிம்மதி பெருமூச்சி விட்டது. ஒருவேளை அந்த கேட்ச்சை பண்ட் தவறவிட்டு இருந்தால் நிச்சயம் விராட் கோலி விமசிக்கப்பட்டிருப்பார். அது நடக்காமல் அவரை ரிஷப் பண்ட் காப்பாற்றியுள்ளார்.

Also Read: காது கேட்கலயா ? இப்போ கேட்டு இருக்குமே ! -வங்கதேச வீரருக்கு களத்திலேயே பதிலடி கொடுத்த விராட் கோலி !