Sports
5 மாதத்துக்கு முன் இந்திய அணி ஆடிய புகழ்பெற்ற மைதானமா இது.. நம்பமுடியாமல் தவிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!
கடந்த ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்த தொடரின் முதல் போட்டி தெற்கு லண்டனில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருப்பார். அதனைத் தொடர்ந்து 111 ரன்களை இலக்காக ஆடிய இந்திய அணி 18. 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றிருக்கும்.
இந்த போட்டியை நிறைய ரசிகர்கள் மறைந்திருந்தாலும் அதில் பலருக்கு ஓவல் மைதானம் நன்கு நினைவிருக்கும். பச்சை பசேலென இருக்கும் அந்த மைதானம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எளிதில் மறக்கக்கூடியது அல்ல. ஆனால், தற்போது அந்த மைதானம் முழுக்க பனியால் நிறைந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த மைதானத்தை நடத்தும் சர்ரே கிரிக்கெட் கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில் பனியால் முழுக்க முழுக்க மூடப்பட்டுள்ள ஓவல் மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதனைப்பார்த்த ரசிகர்கள் அந்த மைதானமா இது என்ற ரீதியில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
வழக்கமாக இங்கிலாந்தில் டிசம்பர் மாதங்களில் அதிகபட்ச குளிர் நிலவும். அந்த தருணங்களில் அங்கு பனிமழை பொழியும். வெப்ப நிலை 5 டிகிரிக்கும் கீழே சென்றுவிடும். ஒருமுறை பனிக்காலத்தில் லண்டனின் தேம்ஸ் நதி கூட உறைந்துபோயிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!