விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த இந்திய மகளிர் அணி !

இந்த ஆண்டு தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த இந்திய மகளிர் அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் கிரிக்கெட் மதமாக பார்க்கப்பட்டாலும் அதில் தெய்வங்கள் என்னவோ ஆண்கள் மட்டும்தான். ஆடவர் கிரிக்கெட் அணிக்கு திரளும் ரசிகர்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு திரண்டதே இல்லை. மகளிர் கிரிக்ஸ்ட் வீராங்கனைகள் இந்தியாவில் கொண்டாடப்பட்டதும் இல்லை. ஆனால், அது எல்லாம் முன்பு இருந்த கதை.. இப்போது நடப்பதே வேறு என்ற அளவில் இருந்தது இந்தியா ஆஸ்திரேலியா மோதிய ஆட்டம்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றிருந்தது.

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த இந்திய மகளிர் அணி !

இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி முன்பயின் டி.ஒய்.பாட்டில் அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை நேரில் காண 45,238 ரசிகர்கள் கூடியிருந்தது இந்திய கிரிக்கெட் அரங்கில் மகளிர் அணி மாற்றம் பெற்றுவருவதை உணர்த்தியது.

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 197 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா அதிரடி காட்டினார்.

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த இந்திய மகளிர் அணி !

ஆஸ்திரேலிய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவருக்கு மற்றொரு தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா உறுதுணையாக ஆடினார். இந்த ஜோடி 8.4 ஓவரில் 76 ரன்கள் குவித்த நிலையில் ஷாபாலி வர்மா 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஜெமிமா விரைவில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஹர்மன்பிரீட் மந்தனாவோடு ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 142 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. ஹர்மன்பிரீட் 21 ரன்களுக்கும் மந்தனா 79 ரன்கள் குவித்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் இறுதியில் அதிரடியாக ஆடிய ரிச்சா கோஷ் ஆட்டத்தை கையில் எடுத்தார். இறுதி ஒவரில் வெற்றிபெற 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,இந்திய அணி 13 ரன்கள் குவித்து ஆட்டத்தை சமன் செய்தது. அதிலும் இறுதிப்பந்தில் ரிச்சா கோஷ் 4 ரன்கள் குவித்து ஆட்டத்தை சமனாக்கினார்.

ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த இந்திய மகளிர் அணி !

பின்னர் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்ல, முதலில் ஆடிய இந்திய அணி 20 ரன்கள் குவித்தது. இதிலும் மந்தனா 13 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியால் சூப்பர் ஓவரில் 16 ரன்கள் மட்டுமே குவிக்கமுடிந்த நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இதன்மூலம் 16 டி20களில் தொடர்ந்து வென்ற ஆஸ்திரேலியாவின் சாதனைக்கு இந்திய மகளிர் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதோடு இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலிய அணிக்கு முதல் தோல்வியையும் பரிசளித்துள்ளது. இந்த போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றபோது 11 லட்சம் பேர் நேரலையில் இந்த போட்டியை பார்த்துள்ளனர். இதுவும் ஒரு சாதனையாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories