Sports
சாதனை புரிந்தும் தொடரில் இருந்து அழுகையுடன் வெளியேறிய நெய்மர்.. பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்த குரோஷியா !
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் பலம்வாய்ந்த பிரேசில் -குரோஷியா ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் பிரேசில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குரோஷியா அணி மிக சிறப்பான தடுப்பாட்டத்தின் ஈடுபட்டு பிரேசில் அணிக்கு ஈடுகொடுத்தது. அதேநேரம் வலுவான பிரேசில் அணியின் முன்கள வீரர்கள் தொடர்ந்து குரோஷியா கோல் போஸ்டை முற்றுகையிட்டு கொண்டே இருந்தனர்.
ஆனால், குரோஷிய அணியின் கோல் கீப்பர் சுபாசிக்கை தாண்டி பிரேசில் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. பிரேசில் வீரர்கள் வினிசியஸ், நெய்மார் ஆகியோர் அடுத்தடுத்த ஷாட்களை கோலாகாமல் தடுத்து சுபாசிக் ஆட்டத்தில் பட்டையை கிளப்பினார். இதன் காரணமாக 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளிலும் கோல் அடிக்க முடியவில்லை.
பின்னர், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் நெய்மார் ஒரு அட்டகாசமான கோல் அடித்து பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த கோல் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலே சர்வதேச போட்டிகளால் பிரேசில் அணிக்காக அடித்த 77வது கோல் என்ற எண்ணிக்கையை சமன் செய்தார்.
ஆனால், அவரின் இந்த கொண்டாட்டம் அடுத்த 15 நிமிடத்தில் அழுகையாக மாறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆட்டம் முடிய 4 நிமிடங்களே இருந்த நிலையில் குரோஷியா அணி பதில் கோல் அடிக்க ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. இதில் பிரேசில் வீரர் ரோட்ரிகோ முதல் வாய்ப்பை தவற விட்ட நிலையில், குரோஷியா அடுத்தடுத்து 4 வாய்ப்புகளை கோலாக்கியது. இறுதியில் பிரேசில் வீரர் மார்கினோஸ் தனது வாய்ப்பில் கோல் அடிப்பதை தவறவிட அதோடு பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவும் முடிவுக்கு வந்தது. 4-2 என கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!