Sports

FIFA உலகக்கோப்பை.. பெண்கள் மட்டுமே நடுவர்களாக திகழும் முக்கிய போட்டி.. குவியும் பாராட்டு !

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டிகளும் விறுவிறுப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளன.

பெரும்பாலும் ஆண் நடுவர்களே கால்பந்து தொடரில் நடுவர்களாக பணிபுரிந்துவரும் நிலையில், பிபா உலகக்கோப்பையில் பெண்களும் நடுவர்களாக செயல்படுவர் என பிபா அமைப்பு சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது.

அதன்படி இந்த தொடரில் பிரான்ஸ், ருவாண்டா மற்றும் ஜப்பானை சேர்ந்த மூன்று பேர் மகளிர் நடுவர்களாகவும்,துணை நடுவர்களாக பிரேசில், மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மூவரும் தேர்வுசெய்யப்பட்டு அவர்கள் களத்தில் இயங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கும் ஜெர்மனி - கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடுவராக பிரான்சை சேர்ந்த Stephanie Frappart செயல்படவுள்ளார்.இதன்மூலம், ஃபிஃபா ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் மகளிர் நடுவராக பங்கேற்கும் முதல் பெண் என்ற வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்யவுள்ளார் Stephanie Frappart.

இவர் ஏற்கனவே, 2019ல் நடைபெற்ற ஃப்ரெஞ்ச் லீக் 1, அதே ஆண்டில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, uefa சூப்பர் கோப்பை இறுதிப்போட்டி, ஆகிய போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார். அதேபோல 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடர் தகுதிச்சுற்றில் நெதர்லாந்து - லட்வியா விளையாடிய போட்டிக்கு நடுவராக செயல்பட்டுள்ளார் என்பதும் குடிப்பிடத்தக்கது.

இதுதவிர பிரேசில் neuza மற்றும் மெக்சிகோவின் Karan Diaz துணை நடுவர்களாகவும், ருவாண்டாவின் salima 4-வது நடுவராகவும் செயல்படவுள்ளார். இதன்மூலம் போட்டியில் முக்கிய நடுவர்களாக பெண்களே இருக்கின்றனர்.

Also Read: "ராயுடுவை போல சஞ்சு சாம்சனையம் ஒழிக்க BCCI முயற்சிக்கிறது " -முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு !