Sports
இனி இவர்களுக்கு T20 போட்டியில் இடம் இல்லை.. BCCI-யின் புதிய திட்டத்தால் மூத்த வீரர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாகத் தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக, இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவைக் கூண்டோடு கலைத்து பிசிசிஐ அதிரடி காட்டியுள்ளது. மேலும் நியூசிலாந்து தொடரில் ரோகித் சர்மா, விரோட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
மேலும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் போட்டிக்கு தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டனர். அதேபோல் மூன்று விதமான போட்டிகளுக்குத் தனி தனியாக கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மூன்று விதமான போட்டிக்கு ஒரே கேப்டன் இருப்பதால் அவரால் பல பிரச்சனைகளைச் சமாளிக்கக் கடினமாக உள்ளது என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கவேண்டும் என்ற குரலும் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், மூத்த வீரர்கள் இல்லாத ஒரு புதிய டி20 அணியை 2024ம் உலகக் கோப்பை போட்டிக்கு தயார்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் இனி டி20 தொடர்களில் விளையாட மாட்டார்கள். ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட விருப்பம். மூத்த வீரர்களை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள்" என தெரிவித்துள்ளார். பிசிசிஐயின் இந்த முடிவு மூத்த வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!