Sports
இந்திய வீரர்களுக்கு பணிச்சுமை என்றால் IPL தொடரில் ஏன் விளையாடவேண்டும்? -கொதித்தெழுந்த பயிற்சியாளர் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
ஆனால் பிற நாடுகளில் நடக்கும் இதுபோன்ற லீக் தொடர்களால் ஐபிஎல் அளவு வெற்றியைப்பெற முடியவில்லை. மேலும் பிற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் கலந்துகொள்ள பிசிசிஐ அனுமதிக்காத நிலையில் இந்திய வீரர்கள் அதில் பங்கேற்பதில்லை. இதன் காரணமாக கிரிக்கெட் பிரபலமாக உள்ள இந்தியாவில் அந்த நாடுகளின் லீக் போட்டியில் பெரிய அளவு பிரபலமாகவில்லை.
அதேநேரம் இந்தியாவில் தொடர்ந்து ஐபிஎல் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் இந்திய மைதானங்களில் தொடர்ந்து ஆடி இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டு லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆடாத காரணத்தால் அங்கு இந்திய வீரர்கள் சிரமத்தை சந்திக்கின்றார்கள்.
மேலும், இந்திய வீரர்கள் இந்திய அணிக்கு ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் ஆடுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதை உண்மையாக்குவது போல இந்திய அணிக்கு ஆடும் போது அடிக்கடி ஓய்வெடுக்கும் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடும்போது ஓய்வெடுப்பதில்லை.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என ரோஹித் சர்மாவின் இளமைக்கால பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "இந்திய அணியில் ஒரு உறுதித் தன்மையே இல்லை. வீரர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதா என்று தெரியவில்லை.பணிச்சுமை இருக்கிறதென்றால் ஐபிஎல் போட்டிகளில் ஏன் அவர்கள் விளையாடுகிறார்கள்? சர்வதேச உலகக் கோப்பைப் போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமெனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதனைத் தவிர்த்து முறையாக சர்வதேச போட்டிகள் அனைத்திலும் விளையாட வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். சர்வதேச கிரிக்கெட்டில் எந்தச் சமரசமும் இருக்கக்கூடாது. இதுதான் நாம் விளையாட்டிற்குச் செய்யும் கெளரவம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!