Sports
"வெறும் கையுடன்தான் செல்லப்போகிறோம்" -கேப்டன் பதவி நீக்கம் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் விரக்தி !
உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியா அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி வங்கதேச நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
ஷிகர் தவான் இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரின் போதும், இலங்கை சுற்றுப்பயணத்தின்போதும் இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் முதலில் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டதால் அவர் அந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக்கபட்டார்.
இந்த நிலையில், நியூஸிலாந்தில் விளையாடிவரும் ஷிகர் தவானிடம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், "கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டது தனக்கு வருத்தம் இல்லை. ஜிம்பாவே அணிக்கு எதிரான கேப்டன்சி மாற்றத்தால் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை.
இந்த உலகத்திற்கு வெறும் கையுடன் தான் வந்தோம், வெறும் கையுடன் தான் செல்லப்போகிறோம்" என வருத்தத்துடன் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பேச்சில் கேப்டன் பதவி மாற்றப்பட்டது குறித்து அதிருப்தி எழுந்துள்ளது தெரியவந்துள்ளது.
Also Read
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! : வடகிழக்கு பருவமழை குறித்து நேரில் ஆய்வு!
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.