Sports
இந்த விஷயத்தில் தோனியுடன் ரோஹித் சர்மாவை எப்படி ஒப்பிடலாம் ?- முன்னாள் வீரரை விமர்சிக்கும் நெட்டிசன்கள் !
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில்பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் மூத்த வீரர்கள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆசிய கோப்பை தொடரில் மோசமாக ஆடிய அவர் இந்த உலகக்கோப்பை தொடரிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் தோல்விக்கு அவரின் இந்த ஆட்டம் பெரும் காரணமாக அமைந்தது.
ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் 4, 15, 2, 15, 27 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக அவரை நீக்கிவிட்டு இளம்வீரரை அணியில் சேர்க்கவேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 4 டெஸ்ட் 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அதுல் வாசன் ரோஹித் சர்மா குறித்து கூறுகையில், “இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷி தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஒரு முடிவுகள் கூட ரோஹித் சர்மா எடுத்ததாக இருக்காது. எப்படி பீல்டிங் செய்யவேண்டுமென்று ரோஹித் சர்மா தான் முடிவு செய்வார். எனக்கு தெரிந்து ரோஹித் சர்மா பேட்டிங் பெரிய அளவில் செய்யாமல் இருந்தாலும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். இதை தான் தோனியும் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் போதுசெய்து வந்தார்" என்று கூறினார். இவரின் இந்த கருத்தைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!