Sports
"இவர் எல்லாம் மனிதனே கிடையாது, ஏலியன்தான்" - இந்திய வீரரை புகழ்ந்துத்தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் !
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
விராட் கோலி ஒருபுறம் சீராக ரன்கள் சேர்க்க சூர்யகுமாரோ நாலாபக்கமும் சுழன்று சுழன்று ஆடி வருகிறார். நெதர்லாந்துக்கு எதிராக 25 பந்துகளில் 51 ரன்கள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக 40 பந்துகளில் 68 ரன்கள், கடைசியாக நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடித்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
இவரின் இந்த ஆட்டத்தை பல வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர். 360 டிகிரி வீரர் என அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் கூட சூரியகுமாரை பார்த்து நீங்கள் 360 டிகிரி வீரர் என்ற இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் சூர்யாகுமார் வேறு கிரகத்தில் இருந்து வந்தது போன்று பேட்டிங் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "சூர்யாகுமார் மற்றவர்களைப் போல அல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வீரர். இவர் பேட்டிங் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இவர் விளையாடிய விதம் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றியதோடு மட்டுமல்லாமல், சரியான தருணத்தில் இந்திய அணிக்கு ரன்களும் வந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!