Sports
உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் அதிரடி கைது! -வெளிவந்த அதிர்ச்சி காரணம் !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதல் தகுதி சுற்றின் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
எனினும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி சுற்றோடு நடையைக் கட்டியது. சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி2 வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் ஆடிய அந்த அணி அந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த போட்டி முடிந்ததற்கு பின்னர் இலங்கை அணி நாடு திருப்ப இருந்த நிலையில், பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இலக்கை அணியில் தேர்வு செய்யப்பட்ட குணதிலகா ஆஸ்திரேலியா வந்த நிலையில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். எனினும் அவர் நாடு திரும்பாமல் அணியில் தொடர்ந்து வந்தார்
இந்த நிலையில், பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் தனுஷ்கா குணதிலகா மீது அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் இல்லாமல் இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது. கிரிக்கெட் வீரர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!