Sports
"ஆஸ்திரேலியாவில் எதற்கு மூன்று ஸ்பின்னர்ஸ்? இவரை எடுத்து இருக்கலாமே?"-முன்னாள் பயிற்சியாளர் ஆதங்கம் !
ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி பலரால் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்கவுள்ளது. ந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
முதல் போட்டியில் இலங்கை நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது. மேலும் இந்த டி20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்திய அணி வீரர்களின் ஆட்டங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வருகிறது.இந்திய அணியில் ஜடேஜா,பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இந்தியா இந்த தொடரை எப்படி அணுகப்போகிறது என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்னும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் முகமது சமி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டி20 உலக கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய அணியில். மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலியாவில் மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால் மூன்று ஸ்பின்னர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்த ஒரு கட்டத்திலும் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெற முடியும். தேவைப்பட்டால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யலாம்.
இதனால் அவர்களில் ஒருவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அணியில் இருந்திருக்க வேண்டும். உம்ரான் மாலிக் இளம் வீரர். நல்ல வேகத்தில் பந்துவீசுகிறார். ஐபிஎல்லில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.ஆஸ்திரேலிய மைதானங்களில் பவுன்ஸ் இருக்கும். ஆகவே அவரை அணியில் எடுத்திருக்கலாம்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!