விளையாட்டு

”இந்திய அணியை இப்படி பார்த்ததேயில்லை.. கோப்பை நிச்சயம் நமக்குதான்” - ரவி சாஸ்திரி ஆருடம் !

இதற்கு முன்பு இந்திய அணியில் இப்படிப்பட்ட பேட்டிங் வரிசை இருந்ததில்லை என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

”இந்திய அணியை இப்படி பார்த்ததேயில்லை.. கோப்பை நிச்சயம் நமக்குதான்” - ரவி சாஸ்திரி ஆருடம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் தேதி பலரால் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக டிந்திய அணி பார்க்கப்படுகிறது.

முன்னர் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. தோனியின் ஓய்வுக்கு பின்னர் இந்திய அணி சரியான பினிஸ்சர் கிடைக்காமல் திணறி வந்தது. ஆனால் இப்போது அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிக சிறப்பாக ஆடி வருகின்றனர்.

”இந்திய அணியை இப்படி பார்த்ததேயில்லை.. கோப்பை நிச்சயம் நமக்குதான்” - ரவி சாஸ்திரி ஆருடம் !

அதே போல நடுவரிசையில் பல ஆண்டுகளாக இந்திய அணி பல முயற்சிகளை செய்தும் சிறப்பாக செயல்பட்ட வீரர் கிடைக்காமல் தவித்து வந்தது. இந்திய அணியின் பல தோல்விகளுக்கும் இதுவே காரணமாக அமைந்தது. இந்த நிலையில் நடுவரிசையில் சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இது தவிர டாப் ஆர்டர் எப்போதுமே பிரச்சனையாக இருந்ததே இல்லை. துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள். சமீப காலமாக திணறி வந்த இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆசிய கோப்பைத் தொடரில் பார்முக்கு திரும்பி மிகவும் நம்பிக்கை அளிக்கிறார்,

”இந்திய அணியை இப்படி பார்த்ததேயில்லை.. கோப்பை நிச்சயம் நமக்குதான்” - ரவி சாஸ்திரி ஆருடம் !

இந்த நிலையில் இதற்கு முன்பு இந்திய அணியில் இப்படிப்பட்ட பேட்டிங் வரிசை இருந்ததில்லை என இந்திய அணியின் முன்னாள் பயிற்ச்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்ததிலிருந்து தற்பொழுது வரை இந்திய அணியை கவனித்துக்கொண்டு தான் வருகிறேன்,. இதற்கு முன்பு இந்திய அணியில் இப்படிப்பட்ட பேட்டிங் வரிசை இருந்ததில்லை. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கோலி, சூரியகுமார், ஹர்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலிமையாக இருக்கிறது. தற்போதுள்ள இந்திய அணியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது, மேலும் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் ” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories