Sports
"விராட் கோலி இப்போதே ஓய்வு பெறவேண்டும்" -அதிர்ச்சி கருத்தை கூறிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடி !
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
அதேநேரம் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.
விராட் கோலியின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. இதைத் தொடர்ந்து பல முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விராட் கோலி பார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷஹீத் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "விராட் கோலி பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர். விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார், அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார். என்று உணர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!