Sports
"இந்திய அணியை பாகிஸ்தான் கருணையின்றி அடித்து நொறுக்கும்" - சோயப் அக்தர் கொண்டாட்டம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் குரூப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரோகித் சர்மா நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.
ஆனால் சிறிய தவறால் ரோகித், விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் இறுதியில் ஜடேஜா,பாண்டியா அதிரடி ஆட்டம் காரணமாக 2 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.
பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது.
அதைத் தொடர்ந்து சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை கடந்து திரில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றி பாகிஸ்தானில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி குறித்து வீடியோ வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர், "இந்தியாவைக் கருணையின்றி அடித்து நொறுக்கும் பாகிஸ்தான் என்று கடந்த வீடியோவிலேயே நான் கூறினேன். இப்போது அதுதான் நடந்துள்ளது. அன்று தோற்றபோதே நான் இந்தியர்களிடமும் என் நண்பர்களிடமும் கூறினேன். பாகிஸ்தான் திரும்பவரும் என்று" என கூறியுள்ளார்.
மேலும், "இந்திய அணியின் இறுதி 11 வீரர்கள் என்று தீர்மானிப்பதில் ஏன் இத்தனை குழப்பம்? அணியில் இடம்பெறுவது யார்? ரிஷப் பண்ட்டா, தினேஷ் கார்த்திக்கா தீபக் ஹூடாவா, ரவி பிஷ்னாயா?உங்கள் இறுதி லெவனைக் கண்டுப்பிடித்துக் கொள்ளுங்கள். இந்திய அணி மிகுந்த குழப்பமான தேர்வைச் செய்கிறது. ஏன் இத்தனைக் குழப்பம் என்றுதான் எனக்குப் புரியவில்லை" என்று இந்திய அணியை விமர்சித்தும் வந்துள்ளார்.
Also Read
-
“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
-
“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!
-
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!