Sports
கார்ல்சனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கூட்டம்.. கூலாக நின்று வேடிக்கை பார்த்த பிரக்ஞானந்தா: வைரல் படம்!
அமெரிக்காவில் கிரிப்டோ கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உட்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் 7வது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா.
இந்த சுற்றில் 4 ரேப்பிட் ஆட்டங்கள் முடிவில் இருவரும் 2 -2 என புள்ளிகளைப் பெற்றதால் ஆட்டம் டை பிரக்கில் முடிந்தது. இருப்பினும் மொத்த புள்ளிகள் அடிப்படையில் 16 பள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
15 புள்ளிகள் பெற்று தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார். இந்த ஆண்டில் மட்டும் 3 முறை மேக்னஸ் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரக்யானந்தா தனது பயிற்சியாளருடன் தனியாக நிற்கையில், எதிரில் கார்ல்சனிடம் ரசிகர்கள் ஆட்டோகிராஃப் வாங்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக சாம்பியனை 3 முறை வீழ்த்தியவருக்குக் கொடுக்கும் மரியாதை இதுதான் என பலர் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், இது எல்லாம் பிரக்யானந்தாவுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. இதே ரசிகர்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே இவரின் ஆட்டோகிராஃப் வாங்க வரிசையில் காத்துக் கொண்டிருப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!