Sports
CSK அணிக்காக தோனி விளையாட அனுமதிக்க முடியாது.. BCCI-ஐயின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐ.பி.எல் பாணியிலான தொடரை ஆரம்பித்துள்ளது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரில் ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், போர்ட் எலிசபத் அணியை சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடல்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வாங்கியுள்ளது.
இதில், சென்னை அணி வாங்கிய ஜோகனஸ்பர்க் அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக சென்னை அணியின் கேப்டன் தோனியை நியமிக்க அந்த அணி முடிவு செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "எந்த இந்திய வீரரும் அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறும் வரை வேறு எந்த லீக்கிலும் பங்கேற்க முடியாது. அப்படி பங்கேற்க வேண்டும் என்றால் அவர் பிசிசிஐ சம்மந்தப்பட்ட எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
எஸ்.ஐ. கண்முன்னே பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்... த.வெ.க எம்.எல்.ஏ. அடாவடி - குவியும் கண்டனம்!
-
நுழைவுத் தேர்வு எந்த வடிவில் வந்தாலும் திமுக எதிர்க்கும்.. கலைஞரின் சட்டப் போராட்டம் (1): முரசொலி!
-
விஜய் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் கொடுத்த அடி : கரூர் நெரிசல்... அரசுப் பணி ரத்து!
-
த.வெ.க அரசின் 24 மணி நேர வேலை இதுதான் : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?
-
மேகதாது அணை விவகாரம் - “லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது” : ரகுபதி பதிலடி!