Sports

இனி வீரர்கள் தவறு செய்யவே முடியாது.. புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தும் பிசிசிஐ! காரணம் என்ன?

பிசிசிஐ-ன் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வீரர்களின் சம்பள உயர்வு, புதிய விதிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு வீரர்களின் வயதை கண்டறிய புதிய மென்பொருளை அறிமுகப்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் U16 அல்லது U19 பிரிவில் ஆடுபவர்கள் தங்கள் வயதை மறைப்பதாக புகார் எழுந்தது. நாடு முழுவதும் இந்த பிரச்சனை இருக்கும் நிலையில் இதை தவிர்க்க புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் வயதை கண்டறிய முன்னர் TW3 என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களின் உண்மையான வயது கண்டறியப்படும். இதில் சில தவறுகள் இருப்பதாக தகவல் வெளிவந்தது. மேலும், இதற்கான பரிசோதனை செலவும் அதிகம் என்பதோடு பரிசோதனை முடிவு வெளியே வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும்.

இதன் காரணமாக தற்போது போன் எக்ஸ்பெர்ட். எனும் புதிய மென்பொருளை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதனை தற்போது சோதனை முயற்சியாக பிசிசிஐ நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நிலையில், அது வெற்றி பெற்றால் வரும் காலங்களில் போன் எக்ஸ்பர்ட் முறையை வைத்து கிரிக்கெட் வீரர்களின் வயது துல்லியமாக கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் வீரர்கள் வயது முறைகேடுகளில் ஈடுபடுவதை சுலபமாக கண்டறிய முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Also Read: "ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டோடு ஓய்வு பெற்று விடுவார்"- ரவி சாஸ்திரியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!