Sports
விளையாட்டிலும் மூட நம்பிக்கை.. ரூ.16 லட்சம் ஊதியத்தில் இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்!
சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆசியக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. இந்திய அணியின் இந்த செயல்பாடுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த ஆசியக் கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணியின் செயல்பாட்டுக்கு முக்கிய காரணம் ஜோதிடர்களின் உத்வேகமூட்டல் என இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பி.டி.ஐ-செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ள அவர், "பயிற்சியை விட ஜோதிடம் வீரர்களுக்கு அதிக உத்வேகம் அளிக்கும். இதற்காக ரூ.16 லட்சம் ஊதியத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றிடம் இந்திய கால்பந்தின் ‘ஜாதகம்’ ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்காக அணிக்கு ஜோதிடர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்" எனக் கூறியுள்ளார்.
கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வாகியின் இந்த கருத்து இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை பதிவு செய்துள்ள பலர் இந்த செய்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த செய்தி உலக அளவில் தெரியவந்தால் இந்திய கால்பந்து அணியை பலரும் கேலி செய்வார்கள் எண்ணுவார்கள் என்பதால் இந்த அறிவிப்புக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் வீரர்களின் திறமையைப் பார்க்காமல் ஜோதிடத்திற்கு முக்கியத்தும் கொடுத்தால் நம்மால் எப்படி பல சாதனைகளை படைக்க முடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் சரமாரியாக கேள்விளை எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!