Sports

சர்வதேச அங்கீகாரம்.. ICC அட்டவணையில் இணையும் IPL தொடர் - பணமழையில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள்!

இந்தியாவில் 2008ல் தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரானது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. மேலும் தற்போதைய நிலையில் உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றாகவும் இது மாறியுள்ளது.

ஆனால், ஐ.பி.எல் போட்டிகளின் போது மற்ற நாடுகளுக்கு சர்வதேச போட்டிகள் இருப்பதால் அந்நாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் ஆடுவதில் சிக்கல் நிலவுகிறது.

இந்த மேலும் ஐ.பி.எல் போட்டிகள் ஐ.சி.சியின் "Future tour programme" பட்டியலில் இல்லாததால் ஐ.சி.சி போட்டிகள் இல்லாத காலக்கட்டத்தை கணக்கிட்டு, ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டியுள்ளது.

இந்தநிலையில், ஐ.பி.எல் போட்டிகள் ஐ.சி.சி-யின் அட்டவணையில் இணைக்கப்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு ஐ.சி.சி-யின் அட்டவணையில் ஐ.பி.எல் இணைத்தபின் ஐ.பி.எல் நடைபெறும்போது வேறு சர்வதேச போட்டிகள் நடக்காது என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஆனால், பி.சி.சி.ஐ-யின் இந்த கோரிக்கைக்கு ஐ.சி.சி மற்றும் இதர நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read: "ஆட்டத்தில் கன்சிஸ்டென்ஸி இல்லை".. இந்திய அணியின் இளம் வீரரை நினைத்து கவலைப்படும் கபில் தேவ்!