Sports
#IPL2022.. ஆட்டநாயகன் அஷ்வின் - கேம் சேஞ்சர் ஆனது எப்படி?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்த போட்டியை ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. ராஜஸ்தானின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் தமிழக வீரர் அஷ்வினே.
ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசிய போது அஷ்வின் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அது கான்வேயின் முக்கியமான விக்கெட்டாக அமைந்தது கூடுதல் சிறப்பு. அதேமாதிரி சேஸிங்கின் போது அதிரடியாக 23 பந்துகளில் 40 ரன்களை அடித்து அணியை வெல்ல வைத்திருந்தார். இந்த பெர்ஃபார்மென்ஸ்களுக்காக அஷ்வினுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
பௌலிங்கில் அஷ்வின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்தாலும் அந்த ஒரு விக்கெட்தான் சென்னையின் சரிவை தொடங்கி வைத்த விக்கெட் என்கிற புள்ளியிலிருந்து அது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விக்கெட் என்றே புரிந்துக் கொள்ள வேண்டும்.
மொயீன் அலி நேற்று சென்னை அணிக்காக பயங்கர அதிரடியாக ஆடியிருந்தார். 93 ரன்களை எடுத்திருந்தார். மொயீன் அலிக்கு பக்க பலமாக நின்று ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தது கான்வேதான். இருவரும் இணைந்து 83 ரன்களை எடுத்திருந்தனர். மொயீன் அலி அதிரடியாக ஆடுகிறார் என்பதால் கான்வே அவருக்கு செகண்ட் ஃபிடில் ஆடிக்கொண்டிருந்தார். இந்த பார்ட்னர்ஷிப் இன்னும் தொடர்ந்தால் ராஜஸ்தானுக்கு பெரும் தலைவலியாக அமையும் என்ற நிலையிலேயே எட்டாவது ஓவரில் அஷ்வின் கான்வேயை lbw ஆக்கி வெளியேற்றினார். இது மிக முக்கியமான விக்கெட்.
இதன்பிறகு, அம்பத்தி ராயுடுவும் ஜெகதீசனும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். தோனி உள்ளே வந்து தடுமாற தொடங்கினார். மொயீன் அலிக்கு கான்வே கொடுத்த ஒத்துழைப்பு அவர் அவுட் ஆன பிறகு கிடைக்கவே இல்லை. இதனால் மொயீன் அலியும் மொமண்டத்தை இழந்து மெதுவாக ஸ்கோர் செய்ய தொடங்கினார். ராக்கெட் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்த சென்னையின் ரன்ரேட் அப்படியே கீழே விழுந்தது. 200+ ஸ்கோரை எடுக்கும் என நினைத்த சென்னை அணி 150 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னையின் இந்த வீழ்ச்சிக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது அஷ்வின் செய்த அந்த பார்ட்னர்ஷிப் உடைப்பு சம்பவமே.
சேஸிங்கின் போதும் ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் தடுமாற தொடங்கியது. சாம்சன், ஜெய்ஸ்வால், படிக்கல் மாதிரியான முக்கியமான பேட்ஸ்மேன்கள் கடைசி வரை நின்று ஆடாமல் சொதப்பினர். மேட்ச்சை முடித்து வைக்க வேண்டிய ஹெட்மயரும் அந்த பொறுப்பை உணராமல் அவுட் ஆனார். ஆனால், அஷ்வின் தனது அணிக்காக அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். முதல் 11 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அடுத்த 12 பந்துகளில் 27 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் 200 க்கும் அதிகம். அஷ்வினின் இந்த அதிரடியான ஆட்டம்தான் கடைசி ஓவர் வரை சென்ற போதும் ராஜஸ்தான் அணி சிறப்பாக வெற்றி பெற காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிவிட்டனர். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேற ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆஃப்ஸில் இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஆக, அஷ்வின் ஆடிய இந்த ஆட்டம் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பையே அதிகரித்துவிட்டிருக்கிறது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!