Sports

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் : தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி!

தாய்லாந்து நாட்டில், பேட்மிண்டன் தொடர்களிலேயே மிக முக்கிய தொடராகக் கருதப்படும் தாமஸ் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இந்திய அணியும் இந்தோனேஷிய அணியும் மோதின. இந்திய அணி சார்பில் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா சென், பிரனாய், சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி, அர்ஜூன்-துருவ் கபிலா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தோனேஷிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இந்த வெற்றியின் மூலம் 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய,தங்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளது இந்திய அணி.

அதிலும், 14 முறை சாப்பியனாக இருந்த இந்தோனேஷியாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று வெற்றியை அடுத்து இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?.. தொடங்கியது KKRvsSRH போட்டி