Sports
RCB வீரரின் தங்கை மரணம்... வெற்றிக்குப் பிறகு வந்த துக்க செய்தி - அணியிலிருந்து விலகிய ஹர்ஷல் படேல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தனது சகோதரியின் மரணத்தைத் தொடர்ந்து அணியிலிருந்து விலகியுள்ளார்.
ஹர்ஷல் படேல் கடந்த இரண்டு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். ஹர்ஷல் படேலை ஆர்சிபி அணி 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது பெங்களூரு அணி. இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஹர்ஷல் படேல். இந்த ஆட்டத்தில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு.
இந்த ஆட்டத்தின்போது பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் படேலின் சகோதரி உயிரிழந்தார். போட்டி முடிந்தபிறகே ஹர்ஷல் படேலுக்கு இந்த துக்கச் செய்தி தெரியவந்தது. இதையடுத்து ஹர்ஷல் அணியில் இருந்து வெளியேறினார்.
ஹர்ஷல் படேல் குடும்பத்தினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாடுவதற்காக ஹர்ஷல் மட்டும் இந்தியாவில் தங்கியுள்ளார். ஹர்ஷல் படேலுக்கு மொத்தம் மூன்று உடன்பிறந்தவர்கள், ஹர்ஷல் படேல், தபன் படேல் மற்றும் அர்ச்சிதா படேல். ஹர்ஷலின் தங்கையான அர்ச்சிதா படேல் உயிரிழந்துள்ளார்.
அணியிலிருந்து விலகிய ஹர்ஷல் படேல், 12-ஆம் தேதி சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!