Sports
ரூ.14 கோடிக்கு ஏலம் போன தீபக் சஹாரால் CSK அணிக்கு புதிய சிக்கல்: அடுத்து என்ன செய்யப்போகிறது?
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியின் போது இந்திய அணி பந்துவீச்சாளர், தீபக் சஹார் பந்துவீசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து மைதானத்திலேயே வலிதாங்க முடியாமல் துடித்தார்.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவர் தொடர்ந்து விளையாட முடியாது என கூறியதை அடுத்து தீபக் சஹார் போட்டியிலிருந்து வெளியேறினார். தற்போது அவருக்கு எந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை என்பதை இந்திய அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், அவர் வலியால் துடித்தைப்பார்த்தால் இன்னும் நீண்ட நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டுவரும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காயம் காரணமாக விரைவில் துவங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் தீபக் சஹார் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே சென்னை அணியில் இடம் பெற்றுள்ள ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வீரர் வயது முறைகேட்டில் சிக்கியுள்ளார். தற்போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஏலத்தில்தான் சென்னை அணி அவரை ரூ.14 கோடிக்கு எடுத்தது. ஒட்டுமொத்தமா இவரை நம்பியே வியூகம் வகுத்திருந்த நிலையில் தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்து சென்னை அணி என்ன செய்யபோகிறது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!