Sports
வங்கதேச அணியை விரட்டிய அமேசான் டெலிவரி பாய்... யார் இந்த ஸ்காட்லாந்து வீரர்?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 7வது டி20 உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 140 ரன்களை எடுத்தது. இதில் ஸ்காட்லாந்து வீரர் கிறிஸ் கிரேவ்ஸ் 28 பந்துகளில் 45 ரன்களை எடுத்து அசத்தினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஸ்காட்லாந்து அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கிறிஸ் கிரேவ்ஸ் இருந்துள்ளார். பேட்டிங்கில் 45 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
பின்னர், போட்டியின் வெற்றி குறித்து ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கொய்ட்சர் பேசுகையில், இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கிறிஸ் கிரேவ்ஸ் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்தவர் என கூறினார்.
இதைக் கேட்டு மைதானத்திலிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டு அவருக்குக் கைதட்டிப் பாராட்டு தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பேசிய கைல் கொய்ட்சர், "கிறிஸ் கிரேவ்ஸின் இன்றைய ஆட்டத்தைப் பார்த்து நான் பெருமையடைகிறேன்.
கிரிக்கெட்டிற்காக அவர் நிறைய தியாகம் செய்துள்ளார். அமேசான் டெலிவரி நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தவர் இன்று டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். அவரின் திறமையை பாராட்ட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!